பிரபல முன்னணி நடிகை தற்போது கர்ப்பம்? தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை தற்போது கர்ப்பம்? தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக விளங்கும் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.

தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, உமா என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் சினிமாவில் இருந்து தற்போது ஓய்வெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது, இதனையறிந்த ரசிகர்கள் காஜலுக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.