பிரபல முன்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகனா இவர்.. அட இவரும் பிரபல பாடகரா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க யாருனு.. இதோ..!!
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, போன்ற பல மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர் சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் எட்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.
இவர் கலைகளுக்கு செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசால் இவருக்கு 1975 இல் பத்மஸ்ரீ , 2002 இல் பத்ம பூஷண், மற்றும் 2017 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் (இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருது) வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இசைத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக சிஎன்என்-ஐபிஎன் சிறந்த சாதனை விருதை யேசுதாசுக்கு வழங்கி கௌரவித்தது.
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார்[6]. தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது.
பாடகர் யேசுதாஸின் மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தான் வைரளாக வருகின்றது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க..