பிறந்தவுடன் அரவிந்த்சாமியை தத்து கொடுக்க இது தான் காரணம்… மனம் திறந்த அவரது தந்தை நடிகர் டெல்லி குமார்…!!

சினிமா

பிரபல நடிகர் டெல்லி குமார் பல் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் குறிப்பாக இவர் மெட்டி ஒலி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை இவர் தான். தமிழ் சினிமாவில் 90களில் நடிகர் ரஜினிகாந்தை ஓரங்கட்டும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் அரவிந்த்சாமி.

மேலும் அந்த வகையில் எனக்கு மாப்பிள்ளை பார்த்தால் அவர் அரவிந்த்சாமி போல் இருக்க வேண்டும் என்று 90ஸ் இளம் பெண்கள் பலரும் கேட்கும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் அரவிந்த்சாமி.

மேலும் அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு மனைவியை பிரிந்தார். மனைவியை பிரிந்தாலும் தன்னுடைய குழந்தைகளை அவரது பாதுகாப்பிலேயே வளர்த்து வந்தார். இந்நிலையில் டெல்லி குமார் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அரவிந்த்சாமி என்னுடைய மகன் தான் அவன் பிறந்த உடனே என்னுடைய மனைவியின் அக்காவுக்கு தத்து கொடுத்து விட்டோம்.

நடிகர் அரவிந்த்சாமி என்னுடைய மகன் என்று தகவல் உண்மை தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என ஒரு பேட்டியில் நடிகர் டெல்லி குமார் கூறியுள்ளார்…