புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பொண்ணு யாரென்று தெரியுமா..? இவங்க தற்போது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகை.. இதோ யாருனு கொஞ்சம் நீங்களே பாருங்க

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதரணமான விசையமில்லை, அப்படி எளிதாக அறிமுகமாக வேண்டுமென்றால் ஓன்று பிரபலங்களின் வாரிசுகளாக இருக்கவேண்டும் இல்லை தயாரிப்பாளர்களின் வாரிசுகளாக இருக்கவேண்டும். அதனை தாண்டி அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடிப்பது அவர்களின் முழுமையான திறமை மட்டுமே. இப்படி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்று குணசித்திர நடிகையாக கலக்கி வருபவர் நடிகை ரித்விகா. தமிழ் சின்னத்திரையில் சில வருடங்களாகவே மக்கள் மத்தியில் விருபி பார்க்கபடுவது பிக்பாஸ் நிகழ்ச்சி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிட்சியமான பல முகங்கள் போட்டியாளராக பங்குபெற்றுள்ளனர். அந்த வகையில் நடிகை ரித்விகா தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு போட்டியாளர் தான். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள ரித்விகா, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக இருந்தார் சேலத்தில் பிறந்த ரித்விகா.

சிறு வயது முதலே நடிப்பில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.தனது கல்லூரி படிப்பதை முடித்துவிட்டு குறும்படங்கள், விளம்பர படங்கள் என்று நடித்துக்கொண்டிருந்த ரித்விகாவிற்கு முதன் முதலில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரித்விகா ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண பெண் தான். இவரது அப்பா ஒரு வெல்டராகவும், அம்மா குடும்ப தலைவியாகவும் இருந்து வருகின்றனர். மேலும், நடிகை ரித்விகாவிற்கு ஒரு சகோதரியும் இருக்கிறார்.

ரித்விகா மட்டும் தான் திரைத்துறைக்கு சம்மந்தபட்டவராக இருந்து வருவதால் அவரது குடும்ப நபர்களை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சமீபத்தில் நடிகை ரித்விகாவின் குடும்ப புகைப்படம் ஒன்று நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் அவரது அம்மா, அப்பா, சகோதரி என அனைவருமே இருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.