ஒரு காலத்தில் இவரையும் படத்திற்கு அனுமதிக்கவில்லை போன்ற செய்திகள் இருந்தது பிறகு காலப்போக்கில் தமிழ்த்திரை உலகத்தில் தனது தேர்ந்த நடிப்பாலும், வள்ளல் குணத்தாலும் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என்றெல்லாம் கொண்டாடப்படக் கூடியவர் எம்.ஜி.ஆர்! கொடுத்து, கொடுத்து சிவந்த கரம் என்றால் அது எம்.ஜி.ஆரின் கரம் தான்!
தான் வாழும் காலம் எல்லாம் தமிழ் திரையுலகில் முடி சூடா மன்னனாக வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர்தான்! ஒருவகையில் நாயகர்கள் அரசியலுக்கு வருவதன் தொடக்கப்புள்ளியாகவும் எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ட்திமுகவில் இருந்து பிரிந்து வந்து, அதிமுகவைத் தொடங்கி தன் முதல் தேர்தலிலேயே வென்றதோடு, தான் உயிரோடு இருந்தவரை தமிழக முதல்வராக இருந்த பெருமையும் அவருக்கு உண்டு.
இந்த எம்.ஜி.ஆர் மடியில் ஒரு பொடியன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அந்த பொடியன் யார் தெரியுமா? சென்னை 28 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த வெங்கட் பிரபு தான் அது. தொடர்ந்து சரோஜா, கோவா, பிரியாணி, மங்காத்தா தொடங்கி மாநாடு வரை இவர் எடுத்த படங்கள் அனைத்தும் அதிரிபுதிரி ஹிட் அடித்தன. இவரது அப்பா கங்கை அமரனும் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். எம்.ஜி.ஆர் மடியில் இருப்பது வெங்கட் பிரபு என தெரிந்த நெட்டிசன்கள் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.