தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றியின் மூலம் ஜெயம் ரவி மக்களிடையே புகழ் பெற்றார். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும். இவர் சமீபத்தில் இவர் நடித்த கோமாளி திரைப்படம் குறைந்த செலவில் உருவாகி வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேராண்மை திரைப்படத்தில் ஒரு நாட்டின் விவசாயத்தில் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் ஏற்படுத்தும் பொருட்டு ஒரு செயற்கைக்கோள் அந்நாட்டின் விஞ்ஞானிகளால் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அந்த செயற்கைகோளை அழிக்கும் வகையில் வெளிநாட்டவர்கள் காடு வாயிலாக பல விதமான தொழில் நுட்ப ஆயுதங்களுடன் ஊடுருவி உள்ளனர்.
அந்த கும்பலை ஐந்து தேசிய மாணவர் படை மாணவிகளைக் கொண்டு கதாநாயகன் எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை. இப்படி ஒரு கதையை கேட்கும் போது நம்முள் ஒரு வர்த்தக ரீதியிலான அம்சங்களைக் கொண்ட ஒரு திரைப்படம் தான் பேராண்மை.
ஆனால் அப்படி ஒரு திரைப்படத்தில் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எப்படியெல்லாம் சமுதாயத்தால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும், இட ஒதுக்கீடு குறித்து ஒரு தெளிவான புரிதலையும், பொதுவுடைமை கொள்கைகளையும், பொருளாதாரத்தையும், அரசியலையும் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் எடுக்கபட்ட திரைப்படம் தான் பேராண்மை.
ஜனநாதன் இயக்கத்தில் 2009-ல், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்த படம் பேராண்மை. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி, சரண்யா, தன்ஷிகா, வர்ஷா அஸ்வதி, வடிவேலு, ஊர்வசி போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.
மேலும் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குனர் ஜனநாதன் திறமை இந்த திரைப்படத்தில் முழுவதும் தெரியும். நடிகர் ஜெயம் ரவிக்கும் இந்த படம் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த திரைப்படத்தில் நடித்த வர்ஷா அஸ்வதியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகிறது. மேலும் பேராண்மை திரைப்படத்திற்கு பின்னதாக நீர்ப்பறவை, கங்காரு, நாகராஜசோழன் எம் ஏ எம் எல் ஏ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.