பேராண்மை பட நடிகையா இது..? அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறீட்டாரே .. எப்படி உள்ளார் என்று பாருங்க !!
நடிகர் ஜெயம் ரவி நடித்து ஜெகநாதன் இயக்கிய “பேராண்மை” திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் ஜெயம் ரவி. இந்த படத்தில் ஜெயம் ரவியோடு காட்டுக்குள் வரும் 5 பெண்களில் ஒருவராக நடித்தவர் தான் வசுந்தரா காஷ்யப். இவர் ஆர்யா நடித்து சரண் இயக்கிய வட்டாரம் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகம் ஆனார்.
நடிகை வசுந்தராவுக்கு அடுத்தடுத்து துணை நடிகைக்கான வாய்ப்புகள் வந்தாலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இருந்தும் அம்மணி பட வாய்ப்புக்காக அவ்வப்போது தன் மாடர்ன் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார். அதற்கு கை மேல் பலனாக இவருக்கு “புத்தன் இயேசு காந்தி” என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.
இது விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இவரின் ரீசண்ட் போட்டோசூட்களைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே “பேராண்மை” படத்தில் நடிகையா இது? என கமெண்ட் செய்துவருகின்றனர்.