பொட்டு அம்மன் படத்தில் நடித்த வி ல்ல னா இவர்? உண்மையில் இவர் இவ்வளவு ஹேன்சமா?? புகைப்படத்தை பார்த்து ஆ ச்ச ரிய மான ரசிகரகள்…!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்பொழுது இவர் அரசியலில் களமிறங்கி வருகிறார்.

நடிகை ரோஜாவின் திரை பயணத்தில் 100வது படமாக வெளிவந்த திரைப்படம் தான் பொட்டு அம்மன்’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொட்டு அம்மன் திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். நடிகை ரோஜா கிளாமர் மட்டுமின்றி, பக்தியிலும் புகுந்து விளையாடுவார் என்பதை இந்த திரைப்படம் நிரூபித்தது.

மேலும் இந்த பொட்டு அம்மன் திரைப்படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் நடித்திருப்பார். இந்த முகத்தை தற்போது பார்த்தாலும் பயம் வரும். அந்த அளவிற்கு இந்த வில்லன் மிகவும் கொடூரமாக நடித்திருப்பார். அவர் வேறு யாருமில்லை. நடிகர் சுரேஷ் பாலா தான். மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ் பாலா.

இவர் நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். தற்பொழுது இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பொட்டு அம்மன் திரைப்படத்தில் நடித்த வி ல்ல ன் நடிகரா இவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.