தமிழ் சினிமாவில் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மணிரத்னம் இயக்கியிருந்த இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்திருந்தனர்.
மேலும் லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். முதல் ஷோவில் இருந்து இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் தான் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் இயக்குனர் மணிரத்னம் தேர்ந்தெடுத்தது நடிகை அனுஷ்கா தானாம்.
2011ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் துவங்கிய போது நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்காவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மணி ரத்னம் முடிவெடுத்துள்ளார். ஆனால் அதன் பின் படம் ட்ராப் ஆகி விட்டது. நடிகை அனுஷ்கா தற்போது பட வாய்ப்புகள் இ ல்லா மல் இருக்கிறார்…