தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு சில நடிகைகள் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருப்பார்கள். அந்த படத்தின் மூலம் அவர்கள் நல்ல இடத்தை அ டைந்து விடுவார்கள். அந்த வகையில் நடிகை ஷீலா ராஜ் குமாரும் ஒருவர். ஷீலா ராஜ்குமார் தமிழ் நடிகை மற்றும் பரத நாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.
மேலும் இவர் பள்ளியில் மாறு வே டப் போட்டி, நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். திருச்சிராப்பள்ளி கலைக்காவேரி கவின் கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியம் பயின்றார்.
இதன் பின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகிய தமிழ் மகள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின் திரைப்பட இயக்குநர் அறிவழகன் இவரை ஆறாது சினம் படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு இவர் நடித்த டுலெட் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இந்த திரைப்படம் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றது. இதனை தொடர்ந்து அசுர வதம், நம்ம வீ ட்டு பிள்ளை, திரௌபதி, ம ண்டேலா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கு ம்பள ங்கி நை ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
பலரும் இவருக்கு திருமணம் நடக்க வி ல்லை என்று நினைத்து வந்தனர். ஆனால் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரின் மா டர்ன் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வெளியாகி வை ரலாகி வருகிறது.