மஜ்னு படத்தில் நடிகர் பிரசாந்துடன் நடித்த நடிகையா இவங்க.? அட ஆளே அடையாளமே தெரியவில்லையே.. இதோ புகைப்படத்தினை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!

சினிமா

தமிழில் 2001-ல் சாக்லேட் பாய் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் நடித்தவர் ரிங்கி கண்ணா.மஹாராஷ்டிரவில் பிறந்த இவரது பெற்றோர்கள் பாலிவுட் நடிகர்கள் டிம்பல் கபாடிய மற்றும் பாலிவுட் கன்னா ஆவர்.ரின்கி கன்னாவிற்கு ட்வீங்கள் கன்னா என்று ஒரு சகோதரியும் உண்டு அவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அவர்களை 2001-ல் திருமணம் செய்துகொண்டார்.

சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி படவாய்ப்பில்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி பல நபர்கள் சினிமா துறையில் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தவகையில் நடிகை ரிங்கி கண்ணா இவரும் ஒருவர் தான். தமிழில் நடிகர் பிரசாந்தின் மஞ்னு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் படங்களும் இந்தி படங்களும் நல்ல கதைகள் அமையாததால் தொழிலதிபர் சமீர் சரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பெண் குழந்தைக்கு தாயாகி லண்டனில் கணவருடன் செட்டில் ஆனார். இதையடுத்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 

தற்போது 42 வயதான ரிங்கி திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒ துங்கி வாழ்ந்து வருகிறார். மேலும் ரிங்கி அவரது அக்காவான டிவிங்கில் கண்ணாவின் பட நிகழ்வுகளுக்கு மட்டும் லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சினிமா மட்டும் இல்லாமல் இந்தியா பக்கமே திரும்பாமல் இது போல இருக்கும் நடிகைகள் சினிமாத்துறையில் அறிமுகமாகி காணாமல் போய்விடுகிறார்கள்.

தமிழில் மஞ்னு படம் பெரிய ஹிட் படமாக அமைந்தாலும் அடுத்த படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ரிங்கியின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.