பழைய நடிகர் முதல் இந்த கால நடிகர் வரை அனைவருக்கும் பாடியவர், நடிகர் இசைமைப்பாளர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமா முதல் அணைத்து மொழிகளிலும் என்னென்றும் பாடல்களை பாடி கலக்கி வந்தவர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம். தன்னுடைய அருமையான குரல் வளத்தால் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்ட இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மண்ணில் விதைக்கப்பட்டார்.
தனது தந்தையின் மறைவுக்கு பின்னும் கூட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகனான எஸ்.பி.பி. சரண் சினிமா துறையில் பாடகராக அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையிலும், எஸ் பி பி சரணுக்கு தற்போது சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லையாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தனது தந்தை போன்ற குரல் இவருக்கும் அமைந்துள்ளது இவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தற்போது துல்கர் சல்மான் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாக உள்ள சீதா ராமம் படத்தில் இரண்டு பாடல்களை பாடி உள்ளார்.சமீபத்தில் இதை பற்றி தெரிவித்த எஸ் பி சரண், மெலோடி பாடல்களை மட்டுமே மக்கள் நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக் கொள்கின்றனர்.
நான் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி இருக்கிறேன். ஒரு காலத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வந்தன. நான் பாடிய படங்களும் நல்ல ஹிட் ஆனது. ரசிகர்களும் நன்றாகவே ஆதரித்தனர்.
ஆனால் அதன் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரவில்லை. அது ஏன் என்று தெரியாது. என்னால் பாட முடியாது என்று எப்போதும் கூறியது இல்லை. அழைப்பு வந்தால் உடனே ரெக்கார்டிங்குக்கு வந்து விடுவேன். இருப்பினும், எனக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். தற்போது, இவருக்கு பாட வாய்ப்பு கிடைக்காததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.மேலும், மிகப்பெரிய பாடகரின் மகனான இவர் தற்போது பாட வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் ஒதுங்கி இருப்பது பலருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
Source:https://manithan.com