மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் வைத்திருந்த சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா ..? வெளியான தகவலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் ..!!

சினிமா

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் வைத்திருந்த சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா ..? வெளியான தகவலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் ..!!

கடந்த பிப்ரவரி 6ம் தேதி இந்திய சினிமா ரசிகர்கள் வருத்தம் அடையும் அளவிற்கு வந்த செய்தி பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம். பாரத ரத்னா, பிலிம்பேர் என விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

இவர் இறந்ததில் இருந்து பிரபலங்கள் அவரது பாடலை பாடியும், நடனம் அமைத்தும் பாடகியை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

பாலிவுட் சினிமாவில் பல பாடல்களை பாடி, பல சாதனைகளை புரிந்த அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை, காரணம் அவரது அப்பாவின் இறப்பு என்று கூறுகின்றனர்.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு மொத்தம் ரூ. 368 கோடிக்கு சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தனது சொத்துக்களை அவர் தனது அப்பாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதற்கு தனது சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறாராம்.