முடி உதிர்வு நீங்கி முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதை மட்டும் செய்தால் போதும்… அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க…!!

health

இன்றைய காலத்தில் சீரற்ற பராமரிப்பு, ஆரோக்கியமின்மை போன்ற பல பிரச்சனைகளால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. நாம் முடி அடர்த்தியாக வளர செய்ய வேண்டும் என்பதை பாரி தெரிந்துக்கொள்ளலாம்.

முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்: 

தலைமுடி வளர்ச்சிக்கு விட்டமின் B5 சத்து மிக முக்கியம். முட்டை, காளான், காலிபிளவர், சர்க்கரை வள்ளி போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த உணவுகளையும் அடிக்கடி உண்பது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

மேலும் விட்டமின் C ஊட்டச் சத்தானது முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. விட்டமின் C எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், ஸ்ரோபரி, தோடம்பழம், முலாம்பழம் போன்ற பழங்களில் அதிகளவு நிறைந்துள்ளது.

இந்த பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் முடி உதிர்வு தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாக வளர வழிவகுக்கும். விட்டமின்  E தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் E ஊட்டச்சத்தானது அவகாடோ, பாதாம், Wheat germ oil, சூரியகாந்தி விதைகள் போன்றவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

இரும்புச்சத்து முடி உதிர்வதைத் தடுப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. முடி நீளமாக வளர இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பச்சைக் காய்கறிகள், முட்டைக்கோஸ், பீன்ஸ், கீரைகள், பச்சைப் பட்டாணி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து உண்ணுதல் சிறப்பானது.

முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு வெங்காயச் சாறு பெரிதும் பங்காற்றுகிறது. வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து வெங்காயம் ஊறிய பின் அந்த நீரினை எடுத்து முடியை அலசி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி  முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து முடி உதிர்வதைத் தடுப்போம்…