முதன்முறையாக தனது மகனை வெளி உலகத்திற்கு காட்டிய யோகி பாபு.! அப்பா மாதிரி இல்லாமல் மிகவும் அழகாக இருக்கிறது என்று கலாய்த்த நெட்டிசன்கள்...!!

முதன்முறையாக தனது மகனை வெளி உலகத்திற்கு காட்டிய யோகி பாபு.! அப்பா மாதிரி இல்லாமல் மிகவும் அழகாக இருக்கிறது என்று கலாய்த்த நெட்டிசன்கள்…!!

Tamil News

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்றாலே அனைவருக்கும் மனதில் நினைவுக்கு வருவது கவுண்டமணி மற்றும் செந்தில் தான் அதன்பிறகு நிறைய காமெடி நடிகர்கள் வந்த விட்டார்கள். அதிலும் வடிவேலு ஒவ்வொரு  மக்களின் மனதிலும் தனது காமெடியால் நீங்க இடத்தை பிடித்தார். தனது பாடி லாங்குவேஜ்  காமெடியால் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

இந்த நிலையில் தற்பொழுது பாடி லாங்குவேஜ் மற்றும் சுருட்டை முடியுடன் தன்னுடைய காமெடி ஸ்டைலால் மக்களிடம் பெயர் போனவர் யோகி பாபு. தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த யோகிபாபு சமீபகாலமாக ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் சரி காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். ஆனால் தற்பொழுது சோலோவாக ஒரு திரைப்படங்களில் முழு காமெடியனாக நடித்து வருகிறார் அது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

யோகி பாபு அவர்களுக்கு திருமணம் எப்பொழுது என ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில்தான் யோகிபாபு திருமணம் செய்துகொண்டார் இவர் வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை.

தனது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்த யோகிபாபு பிரபலங்களை அழைத்து ரிசப்ஷன் வைக்கலாமென திட்டம் போட்டார் ஆனால் ஊரடங்கு காரணமாக அதுவும் நடக்கவில்லை இந்த நிலையில் நடிகர் யோகிபாபு மனைவிக்கு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.  இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே இரு மாநில எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் தன்னுடைய குடும்பத்தினருடன் யோகி பாபு சாமி தரிசனம் செய்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.