சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தற்போது வரை TRP யில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி. சமீபத்தில் சன் தொலைக் காட்சியில் சுந்தரி எனும் புத்தம் புதிய சீரியல் துவங்கியது. அந்த கதையின் படி. கதாநாயகி -க்கு கலெக்டர் ஆக வேண்டும் என கனவோடு, ஒரு குறுங்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்…
அவருக்கு திருமணம் முடிக்க வேண்டும் என அவளின் தாய் நினைக்க, இவளோ படிப்பதே முக்கியம் என வீட்டை விட்டு போகும் முடிவை எடுக்கிறார்.. இந்நிலையில் தாய்.. நீ இந்த திருமணத்தை செய்துக்கொள்ளாவிட்டால் நான் இறந்துவிடுவேன் என சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.. நாயகி நிறம் சற்று கம்மி.. ஆனால் நாயகனோ! மிகப்பெரிய இயக்குநர்.. பல மாடல்களை-யே வேண்டாம் அழகில்லை என்று ஒதுக்குபவன்..
பின் குடும்பத்தின் கட்டாயத்தால், இவளை மணக்கிறான்.. ஆனால் அவனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருக்க.. அவளையும் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்கிறான்.. இந்நிலையில் இந்த சாதாரண நாயகி, எப்படி? கலெக்டர் ஆவாள் என்பதே கதையின் கரு.. இதில் கதா நாயகியாக நடித்து வருபவர் தான் கேபிரியலா.
மேலும் நயன்தாரா நடிப்பி ல் வெளியான ஐரா எனும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிலையில் நடிகை கேபிரியலாவிற்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆம் தனது நீண்ட நாள் காதலன் ஆகாஷ் என்பவரை, கடந்து ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை அதைப்பற்றி எதையும் தெரிவிக்காத கேப்ரியலா.. முதன் முதலாக தன் கணவருடன் சேர்ந்து எடுத்தப்புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…
https://www.instagram.com/p/CRQvCHVBnQz/?utm_source=ig_embed&ig_rid=dbf57888-e906-4ba9-8a42-8d545d25b599