முதன் முறையாக தனது குழந்தைகளின் முகத்தை வெளியில் காட்டிய நடிகை நயன்தாரா!! இன்ஸ்டாவில் ரீ என்ட்ரியா??

சினிமா

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் உள்ளார். நடிகை நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார்.

அப்போது இவர்கள் இருவருக்கும் காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் தேதி இருவரும் திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.

இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா தன் குழந்தைகளின் முகத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் தனது இரட்டை குழந்தைகளுடன் Entry கொடுப்பது போன்று வீடியோ வெளியிட்டு அசத்தியிருக்கும் காட்சிகள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது..

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)