முன்னணி நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

முன்னணி நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Tamil News

தமிழ் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகளுடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து அதன் பின் ’பிரியமான தோழி’ ’தித்திக்குதே’ ’தேவதையை கண்டேன்’ உள்பட ஒருசில படங்களில் நாயகியாகவும் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ரூபிகா என பெயர் வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னரும் ஸ்ரீதேவி ஒருசில தெலுங்கு படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனது மகளுடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஸ்ரீதேவி மற்றும் அவரது மகள் ரூபிகா ஆகிய இருவரும் ஒரே வண்ணத்தில், ஒரே டிசைனில் அணிந்த உடைகளுடன் எடுக்கப்பட்ட இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.