மைனா நந்தினியின் முதல் கணவர் யார் தெரியுமா?? அட இந்த பிரபலம் தானா… வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல தொலைக்காட்ச்சியான விஜய் டிவி சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி இந்த சீரியலில் மூலம் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மைனா நந்தினி. இந்த சீரியலில் அவரின் எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவை பேச்சால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.

மேலும் தற்போது நடிகர் கமல் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்..

இந்நிலையில் நடிகை மைனாவின் முன்னாள் கணவர் பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது மைனா நந்தினி கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த ஆறு மாதங்களில் சண்டை ஏற்பட்டதால் மன வேதனையில் கார்த்தி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அதன் பின் 2019 ஆம் ஆண்டு தொலைக்காட்சி சீரியலில் நடிகரான யோகேஸ்வரன் என்பவரை மைனா நந்தினி திருமணம் மறுமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது தனது குடும்பத்துடன் மைனா நந்தினி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவரின் முதல் கணவரின் புகைப்படம் வெளியாகி வைரலா கி வருகிறது..