தமிழ் சினிமாவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்மணி’ என்ற சீரியல் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிவா மனசுல சக்தி’ ஆகிய தொடர்களில் நடித்தவர் தான் ஜனனி பிரதீப். இவர் தன்னுடன் ஆல்பம் பாடலில் நடித்த யூடியூப் பிரபலமான இனியன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
மேலும் இவர் வித்யா நம்பர் ஒன் என்ற சீரியலில் சஞ்சய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிலையில் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.
இவர்கள் கடந்த மாதம் தான் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அறிவித்த ஒரே மாதத்தில் அந்த ஜோடி திருமணமும் செய்துகொண்டுள்ளனர். இனியன் – ஜனனி பிரதீப் ஜோடியின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
இவர்களது திருமணத்தில் பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் கலந்துக்கொண்டுள்ளனர் தற்பொழுது இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.