லண்டனில் வசிக்கும் நடிகர் மணிவண்ணனின் மகன்..!! சொன்ன சொல்லை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்.!! அப்படி என்ன செய்தார் தெரியுமா?..

Tamil News

தமிழ் சினிமா உலகில் மிக பி ரப லமான நடிகராக திகழ்ந்து விளங்கியவர் மணிவண்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவர் முதலில் 1978 ஆன் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட்டாக சேர்ந்தார். அதன் பின் இவர் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை என்ற ஒரு படத்தின் மூலம் தான் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத்தொடர்ந்து ஜோதி, இங்கேயும் ஒரு கங்கை,நூறாவது நாள், முதல் வசந்தம், சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார்.

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி காலத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தார். ஈழத்துக்கு ஆதரவான பல்வேறு போராட்டங்களில் மணிவண்ணன் பங்கேற்றிருக்கிறார்.

அந்த சமயத்தில் தனது பிள்ளையை ஈழப்பெண்ணுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என கூறினார். சொன்னதை செய்தும் காட்டினார் மணிவண்ணன். லண்டனில் வசிக்கும் ஈழப் பெண்ணான அபி-க்கு தனது மகன் ரகுவண்ணணை திருமணம் பேசி முடித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் – அபி திருமண நிச்சயம் நடந்த நிலையில் ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால் அந்த ஜூன் மாதத்தில் தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார். இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுவண்ணன் – அபி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை மணிவண்ணனின் உயிர் நண்பரான சத்யராஜ் முன்னின்று நடத்தி வைத்தது அப்போது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. தற்போது ரகுவண்ணன் – அபி தம்பதிக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.