வரப்போகும் பிக் பாஸ் சீசன் 5ல் நான் இல்லை.. பிரபல நடிகை அதிரடி.. அ தி ர்ச்சி யான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ்ந் த ரசிகர்கள் ..!!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில், மிகவும் பிரமாண்டமாக, கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் சீசன் 5 விரைவில் தொடங்க இருக்கிறது.

இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.

இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியானது. ஆனால் நான் கலந்து கொள்ளவில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக்பாஸ் தமிழ் 5 ஆம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிக்பாஸ் 5ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.