வாய் பேச முடியாத பெண்ணை காதலிக்கும் நடிகர் விஷால்.. இதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும்..விரைவில் அவருடன் திருமணமா??

Tamil News

நம்ம விஷால் கிருஷ்ணா ரெட்டி தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் முதலில் திரைப்பட நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி அவர்களின் மகன் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார்.

45 ஆண்டுகளாகும் விஷால் அவர்களுக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே செல்கிறது என்றே சொல்லலாம்.நடிகர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன் “அனிஷா” என்பவருடன் திருமணம் நடைபெறவிருந்தது. இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது.ஆனால், தீடீரென இந்த திருமணம் நின்றுபோனது. இதன்பின் விஷால் திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


தற்போது அவர் வாய்பேச முடியாத ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்ற செய்தி பரவி வருகிறது இந்நிலையில், அந்த பெண் யார் என்று பார்த்தல் “பிரபல நடிகை அபிநயாவை” காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தனது நடிப்பினை மிகவும் அழகாக வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே என்று கூறலாம்.

அப்படங்கள் மட்டுமின்றி விஷால் நடிப்பில் வெளிவந்த “பூஜை” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை அபிநயா வாய் பேச இயலாதவராம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அபிநயாவும் விஷாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.ஒரு வேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெறட்டும் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன்..