பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான 2019ம் ஆண்டு புது முகங்களுடன் தொடங்கப்பட்ட ஒரு தொடர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடரில் வினோத் மற்றும் தேஜஸ்வினி இருவரும் புது முகங்களாக நடித்து மக்களுக்கு அறிமுகமானார்கள்.
மேலும் இந்த சீரியல் 2019 முதல் 2021 வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த சீரியல் விரைவில் முடிந்து விட்டது. நடிகை தேஜஸ்வினி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியலில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது இந்த சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ள போகும் அந்த பிரபலம் யார் என தெரியவில்லை. தற்போது நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்…