விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்… சோகத்தில் வாடும் திரையுலகம்…!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை சமீப காலமாகவே பல உயிரிழப்புக்கள் நிகழ்ந்து வருகின்றனர். மேலும் அந்த வகையில் தற்போது இலங்கைத் திரையுலகிலும் ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இலங்கை திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெக்சன் எண்டனி மரணமடைந்துள்ளார்.

நடிகர் ஜெக்சன் எண்டனி வாகன விபத்தில் சிக்கி கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை தனது 65 ஆவது வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவரின் இறப்பு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்…