பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்கள் மற்றும் ரி யாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பிரபலத்தை பெற்று வருகிறது. மேலும் இப்படி இருக்கையில் இந்த சேனலில் கடந்த ஐந்து சீசங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி தமிழ் மக்களையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ்.
மேலும் இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனை முடித்து ஆறாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியளர்களாக கலந்து கொள்ள போகிரர்கள் என்ற ஆர்வம் மக்களிடையே பெரிதளவில் உள்ளது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோ மாளி முடிய உள்ள நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து பிக்பாஸ் துவங்கவுள்ளது.
இந்த சீசனில் போட்டியாளராக தொகுப்பாளர் ரக்க்ஷன் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து பிரபல நாட்டுபுற பாடகியான ராஜலக்ஷ்மி கலந்து கொள்ள உள்ளார். வீட்டில் பொழுது போக்கு வேண்டும் என்பதற்காக இவரை தேர்வு செய்துள்ளனர். முந்தைய சீசனில் இவரைப் போலவே சூப்பர் சிங்கரில் இருந்து ஆஜித்தை தேர்வு செய்து இருந்தனர். குக் வித் கோ மாளி மூலம் பிரபலமாகி தற்போது படங்களில் நடித்து வரும் புகழ் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறுகின்றன.
அடுத்ததாக பிரபல இசையமைப்பளார் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் கலந்து கொள்ள உள்ளார் அதே போல் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சீசனை கமலுடன் இணைந்து சிம்புவும் தொகுத்து வழங்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.