வீட்டில் மணி பிளாண்ட் இருந்தாலும் பணப்பிரச்சினை ஏற்படுகிறதா? மணி பிளாண்ட் வளர்க்கும் பொழுது தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க..

Tamil News

நம்முடைய வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.அதில் மிக முக்கியமானது துளசி.அதன் வரிசையில் ஒன்று தான் “மணி பிளாண்ட்”. அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் வைத்திருந்தால் பணத்திற்கு பஞ்சம் எப்போதுமே இருக்காது என்பது அவரவர் நம்பிக்கை.

ஆனால் வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட் என்ற ஒரு கூற்றும் நிலவி வருகிறது நீங்கள் இந்த தவறை மட்டும் மறந்தும் கூட செய்யாதீங்க..பண பிரச்சினையை கொடுக்கும் மணி பிளாண்ட்.உங்களது வீட்டில் மணி பிளாண்ட் இருந்தும் பணப்பிரச்சினை ஏற்படுகிறதா?என்ன காரணம் சற்றே சிந்தித்து பாருங்கள்.

உங்களுக்கு இதற்கான காரணத்தினை தற்போது தெரிந்து கொண்டு இனி அந்த தவறை செய்யாமல் இருப்பது உங்கள் பணம் பற்றாக்குறை ஆகாமல் பாதுகாக்கும்.மணி பிளாண்டை நீங்கள் சரியான திசையில் வைக்க வேண்டும்.அப்படி வைக்காத பட்சத்தில் தான் உங்களுக்கு வறுமை உண்டாகும்.

வாஸ்துபடி நீங்கள் இந்த செடியை “தென்கிழக்கு” பகுதியில் வைப்பது தான் சிறந்தது.இது “அக்னி மூலை” என்றும் அழைக்கப்படுகிறது.மேலும் இது வளர்ந்து தரையில் விழாமல் பார்த்துக் கொள்ளவும்.மணி பிளாண்டை நடும் போது அதன் இலைகள் தரையில் விழாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இதற்காக, மணி பிளாண்டின் தண்டு பகுதியை கயிற்றால் உயரமாக தூக்கி கட்டலாம்.

எப்போதும் நீங்கள் மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே வைக்காமல் வீட்டில் உள்ளே வைக்க வேண்டும்.காரணம் கேட்டால் இவ்வாறு செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். நீங்கள் வீட்டிற்குள் நேரடியாக யாரும் பார்க்க முடியாத இடத்தில் இந்த செடியை வைக்கவும். மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே நட்டால் என்ன நேரும் என்றால் அதன் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

உங்கள் மணி பிளாண்ட்டை எப்போதும் வேறு ஒருவருக்கு பரிசளிக்க வேண்டாம்.சற்றே வாடிய மணி பிளாண்டை வீட்டில் வைத்திருப்பதால் பலன் ஏதும் இல்லை. அவ்வாறு செய்வது வறுமையை வீட்டிற்குள் வரவழைக்கும்.நீங்கள் இப்படி செய்வதால், லட்சுமி வேறொருவரின் வீட்டிற்குச் செல்கிறாள், அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது.கண்டிப்பாக இந்த செய்தி உங்களுக்கு பலனளிக்கும் என்று நம்புகிறோம்.