திரையுலகில் 2008 ஆம் ஆண்டு பி ரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் அதன் பிறகு நாடோடிகள் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
மேலும் படங்களில் நடித்து வந்தாலும் அவர் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் இவரை அனைவரும் பேசக்கூடிய ஒரு தொகுப்பாளராக மாறினார்.
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தற்போது நேர்கொண்ட பார்வை எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பெண்களின் முன்னேற்றத்தை பற்றியும் அவர்களுக்கு ஆதரவாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இவர் 15 வருடத்திற்கு முன் சினிமாவிற்கு வரும் போது ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லட்சுமி ராமகிருஷ்ணன் சிறு வயதில் இப்படி உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்..