தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, நாசர், பிரபு, வடிவேல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் பிரகர்ஷிதா. இவர் வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது பிரகர்ஷிதாவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையே உள்ளது. இந்த நிலையில் பிரகர்ஷிதா மீண்டும் தனது நடிப்பை தொடர இருக்கிறாராம். அதாவது 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம். ஆனால் எந்த தொடர்,எந்த தொலைக்காட்சி என்பது தெரியவில்லை.
View this post on Instagram