அட நீயாம்மா.... படத்துல இப்படி.... நிஜத்துல அப்படியா.... என மண்டேலா பட நடிகையை கலாயிக்கும் நெட்டிசன்கள் !! கண்ணாடி முன் வேற லெவலாக போஸ் கொடுத்த அம்மிணி !!

அட நீயாம்மா…. படத்துல இப்படி…. நிஜத்துல அப்படியா…. என மண்டேலா பட நடிகையை கலாயிக்கும் நெட்டிசன்கள் !! கண்ணாடி முன் வேற லெவலாக போஸ் கொடுத்த அம்மிணி !!

Tamil News

பொதுவாகவே சினிமாவில் நடிகைகளாக நடிக்க வேண்டுமென்றால் பல அம்சங்கள் இருக்க வேண்டும் அதில் நல்ல அழகாக கலராக கட்டழகு மேனி இளம் வயது என பல்வேறு வகையான நிபந்தனைகள் உள்ளது இருப்பினும் இது அனைத்தும் இருந்தும் கூட பல நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல நடிப்பு திறமை மட்டும் இருந்தாலே போதும் கலரோ அழகோ முக்கியமில்லை என்பது போல் பல நடிகர் நடிகைகள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் வெகு பிரபலமானவர் நடிகை சரண்யா ரவிச்சதிரன்.

இவர் சமீபத்தில் கூட பிரபல முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான மண்டேலா படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் கருப்பாக இருந்தால் நம்மால் சினிமாவில் நடிக்க முடியாது என்றஎண்ணத்தை அடியோடு நீக்கி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிதுள்ளதோடு பல ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகவும் உள்ளார். இந்நிலையில் திரைபடங்களில் நடிப்பதற்கு நிறம் முக்கியமில்லை நல்ல நடிப்பு திறமை மட்டும் இருந்தால் போதும் என்பதை பலருக்கும் நிருப்பித்து காட்டியுள்ளார் சரண்யா.

இவர் திரையுலகில் வருவதற்கு முன்னரே 90-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர் காதலும் கடந்து போகும், இறைவி, வடசென்னை போன்ற பல முன்னணி படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து பிரபல முன்னணி இயக்குனர் பாலா இயக்கி பாதியில் நின்றுபோன வர்மா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

அந்த படத்தில் நடிக்கும் போது இவருடைய நடிப்பை பார்த்து இயக்குனர் பாலாவே பாரட்டியுள்ளராம். இவ்வாறு பிரபலமாக இருக்கும் சரண்யா இதுவரைக்கும் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் சாதாரணமாக அதுவும் ஏழ்மை மற்றும் பரிதாபமான நிலையிலேயே நடித்துள்ளார். ஆனால் படங்களில் அப்படி அடக்க ஒடுக்கமாக இருக்கும் அம்மிணி நிஜத்தில் செம மாடர்னாம்.

அப்படி இருக்கையில் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து தன் உடல் எப்படி இருக்கிறது என்பதை கண்ணாடியில் பார்ப்பது போல் மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரை இதுவரை குடும்ப குத்துவிளக்காக பார்த்து வந்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.