27 வருடமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தேவயானி நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா..?? அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்..!! இவர் சொல்றதும் கரெக்ட் தான்..!!

27 வருடமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தேவயானி நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா..?? அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்..!! இவர் சொல்றதும் கரெக்ட் தான்..!!

Tamil News

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்காத தேவயாணி அதற்கான காரணத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார். இப்பவும் அவர் கூட நடிக்க ஆசையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்துக்கு மகளாக அம்மாவாக அக்காவாக தங்கையாக ஒரே நடிகை நடித்த வரலாறும் உண்டு. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் அவருக்கே ஜோடியான நடிகைகளும் தமிழ் சினிமாவில் உண்டு. முன்னணி நடிகராக இருக்கும் அவருடன் படம் நடிக்க அனைவருமே ஆர்வமாகத்தான் இருப்பார்கள்.

அந்த வகையில் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வலம் வந்தவர் தேவயானி. இவருக்கு அந்த காலகட்டத்தில் ரசிகர் பட்டாளம் ஏராளம். சினிமாவில் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் அனைத்து தாய்மார்கள் மனதிலும் இடம் பிடித்தவர்.

அப்படிப்பட்ட தேவயானி ஏன் ரஜினியுடன் கடந்த 27 வருடமாக நடிக்கவில்லை என்ற காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ரஜினியுடன் நடிப்பதற்கு தகுந்த கதாபாத்திரங்கள் கொண்ட கதை தனக்கு அமையவில்லை என கூறியுள்ளார். மேலும் ரஜினியின் பட கதைக்கு தான் தேவைப்படவில்லை போல எனவும் தன்னுடைய வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.

இருந்தாலும் வருங்காலத்திலும் ரஜினியுடன் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் தேவயானி. தேவயானி தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *