பிரபல காமெடி நடிகர்களின் திரைப்படத்தில் கமிட்டான குக் வித் கோமாளி சிவாங்கி.! என்னது ஹீரோயினா நடிக்கப் போறீங்களா...? படத்தில் ஹீரோ யார் தெரியுமா...?

பிரபல காமெடி நடிகர்களின் திரைப்படத்தில் கமிட்டான குக் வித் கோமாளி சிவாங்கி.! என்னது ஹீரோயினா நடிக்கப் போறீங்களா…? படத்தில் ஹீரோ யார் தெரியுமா…?

Tamil News

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தொடர்ந்து ஏராளமான திரைப்படத்தில் பாடாகியாக கமிட்டாகி வரும் ஷிவாங்கி முதன்முறையாக பிரபல காமெடி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 1972ஆம் ஆண்டு வெளிவந்து தற்போது வரையிலும் எந்த காமெடி நடிகர்களின் திரைப்படங்களினாலும் ஓவர்டேக் செய்ய முடியாத ஒரே ஒரு திரைப்படம் என்றால் அது காசேதான் கடவுளடா. இத்திரைப்படத்தில் முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

அந்த வகையில் இத்திரைப்படம் அமோக வெற்றியைப் பெற்றதால் தற்பொழுது ஆர் கண்ணன் இயக்கத்தில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இத்திரைப்படத்தில் சமீபத்தில் காமெடியில் கலக்கி வரும் முன்னணி நடிகர்களான மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.

இத்திரைப்படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார் இதனை தொடர்ந்து சிவாங்கியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்துள்ளது அவ்வப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிவாங்கி 2019ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.