தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா கர்ப்பமா? இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒற்றை புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன் தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக திருமணம் செய்யாமல் காதலித்து ஊர் சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

இதனையடுத்து, அடிக்கடி சமூக வலைத்தளத்தில், புகைப்படத்தை பதிவிடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் சேர்ந்து, ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படத்தை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். அந்த படத்தை ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டனர். கூழாங்கல் படத்திற்கு டைகர் விருது கிடைத்தது.

இதனிடையே, டைகர் விருது பெற்ற முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றது கூழாங்கல். சனல் குமார் சசிதரனின் மலையாள படமான செக்ஸி துர்காவை அடுத்து டைகர் விருதை பெற்ற இந்திய படம் கூழாங்கல்.

இதனைத்தொடர்ந்து, அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது, எங்களின் முதல் சர்வதேச விருதுடன். எங்களின் முதல் படமான கூழாங்கல் ரோட்டர்டாமில் இருந்து சென்னைக்கு டைகர் விருதை கொண்டு வந்திருக்கிறது.

இந்த அற்புதமான படத்தை அளித்த வினோத்ராஜ் மற்றும் குழுவுக்கு நன்றி. இந்த படத்திற்கு கிடைக்கும் பாராட்டுகள் எங்களை மகிழ்ச்சி மற்றும் பெருமை அடையச் செய்கிறது. நன்றியுடன் இந்த புகைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேலும் ஒரு விருதை பெற எங்கள் இயக்குநர் ரோமானியாவில் இருக்கிறார் என்றார். இந்த புகைப்படங்களை கண்ட நயன்தாராவின் ரசிகர்கள் நயன்கர்ப்பமாக இருக்கிறார், பாப்பா பிறக்கப் போகிறது என்று நினைத்துவிட்டோம். நயன்தாராவுக்கு என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கிறார். எப்பொழுது தான் கல்யாணம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

https://www.instagram.com/p/CSTlD2NhI9B/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published.