தனது மகள் பட்டம் வாங்கியதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை குஷ்பு செய்த செயலால் ரசிகர்களிடம் இருந்து பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது ..!!!

சினிமா

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் குஷ்பு எப்போதும் தன்னுடைய மகள்கள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இன்று அப்படி குஷ்பு தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படத்துடன் கூடிய மகிழ்ச்சியான செய்தி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

குஷ்புவின் இளைய மகளான அனந்திதா கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பட்டமளிப்பு விழா ஆன்லைனில் நடந்துள்ளது. இதனை இணையம் மூலமாக கண்டு களித்த குஷ்பு, “என் வாழ்வில் இப்போது ஒரு உணர்ச்சிகரமான தருணம்.

என் குழந்தை தனது படிப்பில் பட்டம் பெற்று ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறாள். பள்ளியில் கோட் மற்றும் தொப்பியில் அவளைப் பார்க்கும் போது உணர்ச்சி பெருக்குடன் இருப்பதாகவும், தான் அவளை தனது அலுவலகத்தில் இருந்தே ஆன்லைனில் பார்த்து மகிழ்வதையும் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.