அட என்னப்பா சொல்றிங்க குக் வித் கோமாளி பிரபலத்துடன் நடிகர் பிரேம்ஜிக்கு கல்யாணமா? சமூக இணையத்தில் மீம்ஸ் மூலமாக கலக்கும் நெட்டிசன்கள்!!

சினிமா

தமிழ் சினிமா பிரபலங்களிலேயே நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளமால் இன்றுமே பேச்சுலராக இருந்து வருகிறார். தமிழில் நடிகர் இசையமைப்பாளர் என்று பல திறமைகளை கொண்டு தான் இருந்து வந்தார். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. வயது 42 ஆகியும் இன்னமும் திருமணம் செய்யாமல் சுற்றி வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆக போகிறது என்று கூறி பல செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அது பல வகையில் பேசப்பட்டதால் அது தவறான செய்து என்று கூறி அவரே பதிவும் செய்து இருந்தார். பிரேம்ஜி இசையமைப்பாளராக பெரிய ஆளாக வேண்டும் என்று இருந்தாலும் அவ்வப்போது ஹீரோவாகவும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகின்றார். காமெடி நடிகராக ஏற்றுக் கொண்ட மக்களை ஹீரோவாக கேட்கத் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனாலுமே விடாமல் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடுத்தடுத்து இப்போது வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரேம்ஜி. மேலும் இசையிலும்ஒரு பக்கம் ஹிட்டு பாடல்களை கொடுத்து வருகிறார். இப்போது அவர் பிரபல ஓடிடி அமேசான் தளத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக்குடன் பிரேம்ஜி இணைந்து வழங்கி இருந்த லொள் என்ற ரியாலிட்டி ஷோவில் நடித்துள்ளனர். இதில் பிரேம்ஜியுடன் காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி புகழ், ஆர்த்தி, விக்னேஷ் காந்த், மாயா போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பல ப்ரோமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரேம்ஜியுடன் இப்பொது இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் பிரேம்ஜிக்கு எப்போது திருமணமாகும் என தொகுப்பாளர் கேட்க, உடனடியாக நடிகை ஆர்த்தி விரைவில் குக் வித் கோமாளி புகழுடன் ஆக வாய்ப்பு இருக்கிறது என கிண்டலடித்தார். இதைக் பார்த்ததில் இருந்தே அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து ரசிகர்கள் மீம்ஸ் உருவாக்கி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.