சந்தனக்காடு வீரப்பன் குடும்பத்தினரால் நடிகர் யோகி பாபுவிற்கு வரும் பி ரச்ச னை!!! வெளியான காரணம் என்னவென்று தெரியுமா?? அடுத்தடுத்த படங்களில் யோகி பாபு நடிப்பாரா..???

சினிமா

சந்தனக்காடு வீரப்பன் குடும்பத்தினரால் நடிகர் யோகி பாபுவிற்கு வரும் பி ரச்ச னை!!! வெளியான காரணம் என்னவென்று தெரியுமா?? அடுத்தடுத்த படங்களில் யோகி பாபு நடிப்பாரா..???

இப்போது மிக பிசியாக படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கும் நடிகர் யோகி பாபு. இப்போது ஹீரோவாக பல படங்களில் கமிட் ஆகி கலக்கி வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் கிடைக்கும் அனைத்து சிறு சிறு கதாபாத்திரங்களையும் நடித்து வந்த யோகி பாபு, இப்போது தமிழ் சினிமாவில முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக மாறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. தற்போது இருக்கும் தமிழ் காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகரும் இவர் தான்.

மேலும் ஹீரோவாக ஒரு பக்கம் நடித்தாலுமே ஒரு பக்கம் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராகவும் இவர் தான் நடித்து வருகிறார். தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் இவர் தான் காமெடியனாக நடித்து வருகிறார். இறுதியாக இவர் ஹீரோவாக நடித்து வெளியான ‘மண்டேலா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போதும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் இவர் நடித்து வெளியாக இருக்கும் புதிய ஒரு படத்திற்கு வீரப்பன் குடும்பத்தினரால் பி.ர.ச்.சனை ஏற்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் யாசின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீரப்பனின் கஜானா’. இந்த படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என்று பலர் நடித்து வருகின்றனர்.

உண்மையில் காடுகள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்றும் காடுகளின் பெருமையைத் திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசியுள்ள வீரப்பன் குடும்பத்தினர், வீரப்பன் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் படக்குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.