அட கடவுளே எப்படி இருந்த மனுஷனை இன்று வீல்சேரில் வைத்து தள்ளி கொண்டு வரும் நிலைமைக்கு கேப்டன் விஜயகாந்த் வந்துட்டாரே!! காண்போரை கண்க ல ங்க வைத்த வீடியோ இதோ !!

சினிமா

இன்று சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பலராலுமே பகிர்ந்து வரப்படும் காணொளி நடிகர் விஜயகாந்த் விமான நிலையத்தில் வீல் சேரில் அழைத்து செல்லப்பட்ட வீடியோ தான். சில ஆண்டுகளாகவே சில உடல் நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அ.வ.தி.பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சி.கி.ச்.சை. பெற்று வந்தார். கடந்த சில காலமாக இவர் உடல் நிலை தேறி வருவதாகவும் விரைவில் பழையபடி வருவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு அவரின் உடல் நல சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்று அங்கு இருக்கும் பிரபலமான மருத்துவமனைஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அவ்வப்போது தனியார் மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். உடல் நல குறைவால் கட்சி பணிகள், அரசியல் பொதுக்கூட்டங்கள் என்று எதிலும் தலையிடாமல் தான் இருந்து வருகிறார் விஜயகாந்த்.

மேலும் சில முக்கியமான கட்சி முடிவுகளை கூட அவரின் மனைவி பிரேமலதா தான் அறிவித்து வருகிறார். மேலும் கட்சியையும் அவர் தான் மொத்தமாக காத்து வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இருப்பினும் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் வெறும் கையை மட்டும் அசைத்துவிட்டு தான் வந்தார்.

மேலும் இப்பொது அவர் இந்த கொரோனா காரணமாக தன்னுடைய உடல் பரிசோதனை செய்ய அமெரிக்க செல்ல முடியாமல் இருந்து வந்த நிலையில் துபாய்க்கு சென்று தன்னுடைய மருத்துவ பரிசோதனையை முடித்து மீண்டும் நேற்று விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு வந்த விஜயகாந்த் முழு உடலையும் மறைக்கும் வகையில் கோட் அணிந்திருந்து, தொப்பி மற்றும் மாஸ்க் கொண்டு முகத்தையும் மறைத்திருந்தார்.அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியனும் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *