அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிரபல முன்னணி பாலிவுட் நடிகையின் திருமணம்..!! வை ரலாகும் புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

பாலிவுட்டின் பிரம்மாண்ட திருமணமான விக்கி கெளஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடியின் திருமணம் கோலாகலமாக அரங்கேறி உள்ளது.

இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ராஜா ராணி போல அலங்கரித்துக் கொண்டு இருக்கும் நட்சத்திர ஜோடியினரை ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர். மகாராணி போல கத்ரீனா கைஃப் இருக்கும் புகைப்படங்கள் பார்வையாளர்களின் கண்ணை பறித்துள்ளது.

விக்கி கௌஷல் மற்றும் கத்ரினா கைஃப் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவேற்றியுள்ளனர். ”அன்பும், நன்றியும் மட்டுமே எங்களை இந்த தருணத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. உங்களின் அன்பு மற்றும் ஆசியுடன் இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

கத்ரீனாவும், விக்கியும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 7 லட்சமாம். ஆனால் கத்ரீனாவின் திருமணத்திற்கு ரிசார்ட் வாடகை எதுவும் வாங்காமல் இலவசமாக இடத்தை கொடுத்திருக்கிறதாம்.

நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரகசியமாக வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.