பிரபல ஹரிஹரனின் மகன் ஒரு பிரபலமா..? அடேங்கப்பா ஆச்சு அசல் அப்பாவா போலவே இருக்காங்களே .. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

பிரபல ஹரிஹரனின் மகன் ஒரு பிரபலமா..? அடேங்கப்பா ஆச்சு அசல் அப்பாவா போலவே இருக்காங்களே .. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

ஹரிஹரன் ஒரு பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவர் . இவர் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் 03.04.1955 அன்று பிறந்தார்.. தமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சிப் பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009ல் மோதி விளையாடு என்ற தமிழ்ப்படத்திற்குப் பின்னணி இசையும் அமைத்துள்ளது.

இவர் 1992 ஆம் ஆண்டு பிரபல பாடகர் ஏ. ஆர். ரகுமான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார் . இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் “தமிழா தமிழா நாளை” என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுகப் படம்.

அனைத்திந்திய ‘சுர் சிங்கர்’ இசைப் போட்டியில் 1977-ல் வெற்றி பெற்றார். அங்கு நடுவராக வந்திருந்த இசையமைப்பாளர் ஜெய்தேவ் 1978-ல் ‘கமன்’ இந்திப் படத்தில் ‘அஜீப் ஸா நேஹா முஜ் பர்’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பளித்தார். இதற்காக இவருக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.

தமிழில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், இந்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், பிற மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். லெஸ்லி லூயிஸுடன் இணைந்து நடத்தும் ‘கலோனியல் கஸின்ஸ்’ இசைக்குழு சார்பில் பல ஆல்பங்களை வெளியிட்டார்.

‘மோதி விளையாடு’, ‘சிக்குபுக்கு’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் இந்தக் குழு பின்னணி இசை அமைத்துள்ளது. இவருக்கு 1998, 2009-ல் தேசிய விருது கிடைத்தது. பத்ம, 2 முறை, தமிழக அரசு விருது, ஆந்திர, கேரள மாநில விருதுகள், ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

இவர் சினிமா வாழ்க்கையும் ஒரு பக்கமிருக்க தற்போது இவரது மகன் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களை போன்றே மகனும் இருகின்றார் என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்…

Leave a Reply

Your email address will not be published.