80ஹிட்ஸ்களில் பிரபலமான நடிகை ராதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா..? அட இவரும் பிரபல நடிகரா ..? ! இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

80ஹிட்ஸ்களில் பிரபலமான நடிகை ராதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா..? அட இவரும் பிரபல நடிகரா ..? ! இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

உதய சந்திரிகா, தனது திரைப் பெயரான ராதாவால் நன்கு அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். சில மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். அவர் 1981 முதல் 1991 வரை திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். அவரது மூத்த சகோதரி அம்பிகாவும் ஒரு நடிகை.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ராதா திருமணத்திற்கு பின்னர் சொந்த தொழிலில் அக்கறை காட்டி வந்தார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.

இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ராதாவின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை ராதாவே நியூஇயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மகன் ஹீரோ போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Radha (@radhanair_r)