அட நடிகை லட்சுமி மகள் யார் என்று தெரியுமா..? இவங்களும் பிரபல முன்னணி நடிகையா..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகை லட்சுமி மகள் யார் என்று தெரியுமா..? இவங்களும் பிரபல முன்னணி நடிகையா..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தொழில் ரீதியாக லக்ஷ்மி என்று அழைக்கப்படும் யாரகுடிபாடி வெங்கட மகாலட்சுமி, முதன்மையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பணிபுரிந்ததற்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் 1961 இல் ஸ்ரீ வள்ளி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார். 1968 இல் ஜீவனாம்சம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அவரது அறிமுகமானது.

1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் சட்டக்காரி (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் கிடைத்தது.

தனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார்.

ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.ஆறு படத்தில் ரவுடி பொம்பளை கேரக்டரில் நடித்து, மேடையில் ஏறி அரசியவாதிகளை அழகான சென்னை பாஷையில் திட்டுவார் ஐஸ்வர்யா. அந்த ஐஸ்வர்யா லட்சுமியின் மகள்தான்.

Leave a Reply

Your email address will not be published.