21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷாலினி.. அவர் நடிப்பதற்கு அஜித் போட்ட ஒரே கண்டிஷன்...!! படத்தின் ஹீரோ யார் தெரியுமா...?

21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷாலினி.. அவர் நடிப்பதற்கு அஜித் போட்ட ஒரே கண்டிஷன்…!! படத்தின் ஹீரோ யார் தெரியுமா…?

Tamil News

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த பல நடிகைகள் உள்ளனர். இவர்களில் 90 களில் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. இவர் மலையாள நடிகை என்பது தெரிந்ததே. மேலும் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் என்பதும் முக்கியமாகும்.

அதன் பின்னர் கதாநாயகியாகவும் அறிமுகமானார். விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான் ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உருவானார்கள் என்பதும் உண்மையே.

இதனைத் தொடர்ந்து அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இப்படத்தின் போது தான் அஜித் – ஷாலினி இருவருக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இதனால் ஷாலினி சினிமாத்துறையை விட்டு விலகியிருந்தார்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பல நடிகர்களுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்தப் படத்தில் ஷாலினியும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.