3 வருடம் கழித்து மீண்டும் சினிமாவில் களமிறங்கும் லக்ஷ்மி மேனன்!! யார் கூட நடிக்கிறார்ன்னு தெரியுமா ?? அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் தன்னுடைய 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, ‘சுந்தர பாண்டியன்’ படமும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ரெக்கை, என பல படங்களில் நடித்தார்.

ஆனால், புதிய நடிகைகளின் வரவால், லட்சுமி மேனன் மார்க்கெட் டல் அடித்தது. இதனால், லட்சுமி மேனனும் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சாகசம் போன்ற படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.

தற்போது இவருடைய கைவசம், பிரபுதேவாவுடன் நடித்து வரும் யங் மங் சங் என்கிற படம் மட்டுமே உள்ளது. இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து நடித்திருந்தார் லட்சுமி மேனன்.

இவர் தற்போது சோஷியாலஜி டிகிரியும் மற்றும் குச்சிப்புடி டிப்ளமோ போன்ற படிப்பும் படித்து வருகிறார். என்னதான் படித்து வந்தாலும் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி ஆவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளாராம்.விரைவில் அறிவிப்பினை எதிர்பார்க்கலாம்.