44 வயது நடிகையுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகர் விஜய்… செம குஷியில் ரசிகர்கள்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

மேலும் இதில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த  திரைப்படத்தின் படப்பிடிப்பானது விறு விறுப்பான நடைபெற்று  கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற 2024ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது

மேலும் இந்நிலையில் தளபதி 68 குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதில் விஜயக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி அனைவருக்குள்ளும்  எழுகிறது.

நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த குஷி, திருமலை இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தளபதி 68ல் ஜோதிகா விஜயக்கு ஜோடியாக நடிப்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது…