45 வயது பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தொடர்ந்து தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தான் வெளியாகி வருகிறது.

இவருக்கு பல முன்னணி ஹீரோக்கள் வாய்ப்பு தர முன் வரவில்லை. அதனால் தான் இப்படி கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

புலிமடா என்ற அந்த படத்தினை பிரபல இயக்குனர் ஏகே. சாஜன் இயக்கி வருகிறார். விரைவில் படம் ரிலீஸ் ஆக இருப்பதால் தற்போது புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்..