48 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல முன்னணி நடிகர் பிரசாந்த்!! மணப்பெண் யார் தெரியுமா?? புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், இயக்குனருமான தியாகராஜனின் மகன் தான் நடிகர் பிரசாந்த். இவர் தமிழில் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் ஆணழகன் என்ற திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார். நடித்ததுமட்டுமின்றி உண்மையாகவே ஆணழகன் என்று திரையுலகில் அழைக்கப்பட்டார்.

மேலும் இவருக்கு தற்போது 48 வயதாகும் நிலையில் இவர் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் இன்றைக்கு இருக்கும் அஜித் மற்றும் விஜய் அளவுக்கு பிரபலமாக இருக்க வேண்டியவர் நடிகர் பிரசாந்த். குடும்ப வாழ்வில் இவருக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளால் இவரால் நடிப்பை தொடர முடியவில்லை.

இவரது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது. தெரிய வந்ததை அடுத்து மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அதன் பின் மனக்குழப்பங்கள் காரணமாக திரையுலகிலிருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது 48 வயதில் நடிகர் பிரசாந்த் இரண்டாவது திருமணம் செய்ய போவதாகவும் உறவினர் பெண் ஒருவரை நிச்சயம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..