தென்னிந்திய சினிமாவில் தற்போது எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் வந்த போதிலும் பல முன்னணி நடிகைகள் இன்றளவும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டளாத்தையும் பிரபலத்தையும் வைத்துள்ளார்கள் எனலாம். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அமலாபால்.
தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர். பிரபலமாக இருக்கும் பொழுதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனாலும் முன்பு போல் அவரால் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை.
அந்த மாதிரியான கதாபாத்திரங்களே அவரைத் தேடி வந்தது. அதற்கு ஏற்றார்போல் சமூக வலைத்தளங்களில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். இதனால் அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது அவர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நாகர்ஜுனா. இவர் நடிகை சமந்தாவின் முன்னாள் மாமனாரும் கூட. இவர் தெலுங்கில் தற்போது கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தவர் காஜல் அகர்வால். இவர் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து விலகினார். அதனால் இந்த வாய்ப்பு அமலாபாலுக்கு சென்றது.தற்போது அமலாபால் இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அமலாபால் மற்றும் நாகார்ஜுனா இருவருக்கும் இடையே ஒரு லிப் லாக் சீன் உள்ளது. அந்தக் காட்சியில் நடிப்பதற்கு அமலாபால் முதலில் பேசிய சம்பளத்தை விட அதிக பணம் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தன்னை விட வயதில் அதிகமான நடிகருடன் நெருக்கமான காட்சியில் நடிப்பதால் தான் அவர் இவ்வளவு பணம் கேட்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. அமலாபால் ஏற்கனவே விவாகரத்து, மாடர்னான போட்டோ என்பது போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குகிறார். இந்நிலையில் இந்த மாதிரியான சர்ச்சை அவருடைய சினிமா வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.