80 களில் கொடிகட்டி பறந்த நடிகை லட்சுமி-யின் கணவர் பிரபல சீரியல் நடிகரா ..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

80 களில் கொடிகட்டி பறந்த நடிகை லட்சுமி-யின் கணவர் பிரபல சீரியல் நடிகரா ..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தொழில் ரீதியாக லக்ஷ்மி என்று அழைக்கப்படும் யாரகுடிப்பாடி வெங்கட மஹாலக்ஷ்மி, சில ஹிந்தித் திரைப்படங்களுடன் முதன்மையாக தென்னிந்தியத் திரையுலகில் தனது பணிகளுக்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் 1961 இல் ஸ்ரீ வள்ளி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார். 1968 இல் தமிழ் திரைப்படமான ஜீவனாம்சம் மூலம் நடிகையாக அவரது அறிமுகமானது.

தனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன.வளர்க்கும் உரிமை பெற்றார். ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது.

இதுவரை 400 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் லெட்சுமி, ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்தார். அது செம ஹிட்டானது.சின்னத்திரையில் தமிழில் அச்சமில்லை அச்சமில்லை என்னும் அரட்டைத் தொடரையும் நடத்தினார். என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.