தென்னிந்திய சினிமாவில் சுமார் 17 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் நடிகை மாதவி(Madhavi). அன்றைய முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோருடன் பலமுறை ஜோடி போட்டார்.சினிமாவில் நடித்த 17 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கொடி நாட்டியவர். அதுமட்டுமில்லாமல் கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து தள்ளியுள்ளார்.நடிகை மாதவிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே ஏகப்பட்ட கி சுகிசுக்கள் அப்போதே தோன்றின.
ஏன் ஒரு கட்டத்தில் கமலஹாசன் மாதவியை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
80-களில் தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நடிகை தான் மாதவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ’தில்லுமுல்லு’ ’தம்பிக்கு எந்த ஊரு’ ’விடுதலை’ போன்ற படங்களிலும் கமல்ஹாசன் நடித்த ’ராஜபார்வை’ ’டிக் டிக் டிக்’ ’காக்கிசட்டை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு அவருடைய ஆன்மீக குருவின் ஆலோசனைப்படி அமெரிக்க தொழிலதிபர் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்ட மாதவி, அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டார்.
மேலும் மாதவி – சர்மா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவர்களின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.