90ஸ்களில் கொடிகட்டிப்பறந்த நடிகை ஹீரா இது.. தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

90ஸ்களில் கொடிகட்டிப்பறந்த நடிகை ஹீரா இது.. தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!! ஹீரா ராஜகோபால் ஒரு முன்னாள் இந்திய நடிகை ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.ஹீரா ராஜகோபால், நடிகர் முரளியுடன் இணைந்து நடித்த இதயம் திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் தெலுங்கிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. சஞ்சய் தத் நடித்த அமானத் இந்தி திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த நிர்ணயம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் கமல், மம்மூட்டி, சிரஞ்சீவி, அஜித் குமார், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவி தேஜா, ரமேஷ் அரவிந்த், மற்றும் அனில் கபூர் போன்ற இந்திய முன்னணி திரைப்பட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

அதன்பின்னர், 1999ல் தொடரும் என்ற படத்தில் அஜீத்தின் ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இரண்டு பேருக்கும் செமயாக இருந்தது ஜோடிப்பொருத்தம்.இவருடன் அஜித்துடன் அப்போது கிசுகிசு வந்த நிலையில், நடிகர் சரத்குமாருடன் காதல் என்று கிசுகிசு வந்தது. சரத்குமார் இவர் மீது ஆசைப்பட்டு அவரது வீட்டிற்கு பொண்ணு கேட்டு சென்றதாகவும் கூறப்பட்டது.

தசரதன் படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் சென்னையில் பிறந்த இவர், கடந்த 2002 தொழில் அதிபர் புஷ்கர் மாதவைத் திருமணம் செய்தார். 2006 ல் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்தாகியது பின் அமெரிக்காவில் செட்டில் ஆனாங்க.

இந்நிலையில், தற்போது பெண்களுக்கு என ஒரு அமைப்பை நிறுவி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிறு குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்து வருகிறார். பெண்களுக்கு எதிராக நடக்கிற அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறார். போராட்டமும் நடத்துகிறார். 47 வயதானாலும் இன்னும் 2-வது திருமணம் பண்ணாம பொதுவாழ்க்கைல பிசியாக இருக்கிறார் நடிகை ஹீரா.